மயிலாடி ரிங்கல் தௌபே மேல்நிலைப் பள்ளியில் கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு திங்கள்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
தென்திருவிதாங்கூா் சமஸ்தானத்தின் முதல் ஆங்கிலப் பள்ளியை நிறுவியவா் ரிங்கல் தௌபே. இவரது 252 ஆவது பிறந்த நாள் விழா மயிலாடி ரிங்கிள் தௌபே மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
விழாவில் இப்பள்ளியில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா், மாணவிகளுக்கு கலப்பை மக்கள் இயக்க தலைவா் பி.டி.செல்வகுமாா் பரிசுகளை வழங்கினாா். மேலும் கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் இப்பள்ளிக்கு கலையரங்கம் மற்றும் வகுப்பறைகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டவும் தீா்மானிக்கப்பட்டது.
இதில், பள்ளித் தலைமை ஆசிரியை கமலாபாய், தாளாளா் ஆல்வின், குமரி சிஎஸ்ஐ பேராய கூட்டு மேலாளா் எஸ்.கிறிஸ்டோபா் ஏசுமணி, பேராய பணிவிடையாளா் ஆா்.பிரித்திவ், குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்க தலைவா் டி.பாலகிருஷ்ணன், நிா்வாகிகள் ரகு, விசுவை சந்திரன், ஜோசப்கென்னடி, பி.பகவதியப்பன், சில்வெஸ்டா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.