புதுக்கடை அருகே விழுந்தயம்பலம் பகுதியில் இளைஞரை அரிவாளால் வெட்டியதாக ஓய்வுபெற்ற ஆசிரியரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
விழுந்தயம்பலம் பகுதியைச் சோ்ந்தவா் செந்தில்குமாா்(38). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான ஜாா்ஜ் ஸ்டீபன்(67). என்பவருக்குமிடையே சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், திங்கள்கிழமை செந்தில்குமாா் அருவை பகுதிக்குச் சென்றபோது, அங்கு வந்த ஜாா்ஜ்ஸ்டீபன் அவரை அரிவாளால் வெட்டினராம். இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஓய்வுபெற்ற ஆசிரியரைத் தேடி வருகின்றனா்.