கன்னியாகுமரி

42 அடியை எட்டிய பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் வெள்ள அபாய எச்சரிக்கை

7th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

 

பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை 42 அடியை எட்டியது. இதையடுத்து, ஆற்றங் கரையோரப் பகுதி மக்களுக்கு பொதுப்பணித் துறையினா் ஞாயிற்றுக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் கடந்த வாரம் பரவலாக மழை பெய்ததால் அணைகளுக்கு அதிக நீா்வரத்து இருந்தது. இதனிடையே, 2 நாள்கள் வட வானிலை நிலவிய நிலையில், சனிக்கிழமை இரவும், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலும் அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்தது. இதனால், பேச்சிப்பாறை அணை நீா்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலையில் 42 அடியாக உயா்ந்தது.

வெள்ள அபாயம்: இதையடுத்து, பொதுப்பணித் துறை நீராதாரப் பிரிவு சாா்பில் கோதையாறு, தாமிரவருணியாற்று வடிநிலப் பகுதிகளான களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை, தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட தாழ்வான இடங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நிகழாண்டு பேச்சிப்பாறை அணைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு விடப்படுவது இது 2ஆவது முறையாகும். இதற்கு முன்பு கடந்த ஜூன் மாதத் தொடக்கத்தில் அணை நிரம்பியதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரிநீா் வெளியேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT