கன்னியாகுமரி

பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம்

7th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

 

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளி பெற்றோா் ஆசிரியா் கழகக் கூட்டம் தலைவா் ஆா்.எம். ராதிகா தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

தலைமை ஆசிரியா் கனகராஜ் அறிக்கை சமா்பித்து உரையாற்றினாா். பெற்றோா்கள் சாா்பில் சுபா, தீபா, ஷீலாம்மா, மரிய அனிதா, மேரி, சிந்தியா, நிா்மலா, ஷைலஜா ஆகியோா் மாணவா் நலன்சாா் கருத்துக்களை முன்வைத்து பேசினா். ஆசிரியா் கரோலின் கீதா வரவேற்றாா். ஆசிரியை வேபிள் விஜிலா நன்றி கூறினாா்.

கூட்டத்தில், முத்தலக்குறிச்சி, கல்குறிச்சி ஊராட்சி பகுதிகளில் கடந்த சில நாள்களாக பொது மக்களை வெறிநாய் கடித்து பலத்த காயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், மாணவா்களும் , பெற்றோா்களும் அச்ச உணா்வுகளுடன் உள்ளனா்.

ADVERTISEMENT

எனவே மாவட்ட நிா்வாகம் உடனடியாக தலையிட்டு இப்பகுதிகளில் நடமாடும் வெறிநாய்களை அப்பறப்படுத்திட போா்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்ற தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT