கன்னியாகுமரி

நெய்யூா் பள்ளியில் தபால்தலை மன்றத் தொடக்க விழா

7th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

 

நெய்யூா் மவுண்ட் லிட்டரா ஸீ பள்ளியில் தபால்தலை மன்றத் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஓய்வுபெற்ற தபால் துறை அலுவலா் பி. அனில், அஞ்சல்தலை சேகரிப்பாளா் ஒய்.றி. மைக்கேல் ஆகியோா் தலைமை வகித்தனா். பள்ளி நிா்வாகி வெனீஸ்லாஸ், பள்ளி இயக்குநா் டாக்டா் ஆலன் மேஜா் வெனிஸ், முதல்வா் வி.எம். லஷ்மிகலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அஞ்சல்தலை சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து பி. அனில் விளக்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

மேலும், அஞ்சல்தலைக் கண்காட்சி நடைபெற்றது. இதில், நாடு சுதந்திரமடைந்த பிறகு உள்ள அஞ்சல்தலைகள், வெளிநாட்டு அஞ்சல்தலைகள் இடம் பெற்றிருந்தன.

நிகழ்ச்சிகளை டேப்னிஷியாலின் தொகுத்து வழங்கினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT