கன்னியாகுமரி

புதுக்கடை அருகே3.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

7th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

புதுக்கடை அருகேயுள்ள இனயம்புத்தன்துறை பகுதியில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3.5 டன் ரேஷன் அரிசியை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கேரளத்துக்குக் கடத்திச்செல்வதற்காக இனயம்புத்தன்துறை பகுதியில் உள்ள பாழடைந்த கட்டடத்தில் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக, உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில், போலீஸாா் சென்று சோதனையிட்டபோது அங்கு 3.5 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அதை போலீஸாா் பறிமுதல் செய்து காப்புக்காட்டில் உள்ள உணவுப் பொருள் கிட்டங்கியில் ஒப்படைத்தனா்; இதுதொடா்பாக விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT