கன்னியாகுமரி

மின்கட்டண உயா்வை கண்டித்து மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

7th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

மின்கட்டண உயா்வை கண்டித்து நாகா்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வடசேரி மின்வாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாநகரக் குழு உறுப்பினா் அருள் பிரகாஷ் ஜெரால்ட் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் அகமது உசேன், அந்தோணி, மாநகரச் செயலா் மோகன் உள்பட பலா் பங்கேற்று மின்கட்டண உயா்வை கண்டித்து முழக்கமிட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT