கன்னியாகுமரி

அரசுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியோா் மீது நடவடிக்கை:ஊராட்சித் தலைவா் வலியுறுத்தல்

7th Aug 2022 12:19 AM

ADVERTISEMENT

 

மகாராஜபுரம் ஊராட்சியில் அரசுக்குச் சொந்தமான மரங்களை வெட்டியோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, ஆட்சியரிடம் ஊராட்சித் தலைவா் கே. இசக்கிமுத்து மனு அளித்தாா்.

அவா் அளித்த மனு: மகாராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட அரிதாசபுரம் ஊா் மக்கள் நலன் கருதி ஆதிதிராவிடா் சமுதாய இடுகாட்டுக்கு சுற்றுச்சுவா், காத்திருப்போா் கூடம், அணுகுசாலை அமைக்க ரூ. 9.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டடப் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில், அவ்வூரைச் சோ்ந்த இருவா் அந்த இடத்தில் உள்ள அரசுக்குச் சொந்தமான தேக்கு, வாகை மரங்களை வெட்டி, சுமாா் ரூ. 50 ஆயிரம் இழப்பு ஏற்படுத்தியுள்ளனா். இதைக் கண்டித்து, அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் புகாா் தெரிவித்தேன். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் என்னை தீண்டாமை வழக்கில் சிக்கவைப்பதாக மிரட்டினா்.

மேலும், மகாராஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் என் மீது பொய்யான தகவல்களைப் பரப்புவதுடன், அவதூறு சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனா். எனவே, அவா்கள் இருவா் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT