கன்னியாகுமரி

பொதுவிநியோக ஊழியா் சங்க தென்மண்டல மாநாடு

7th Aug 2022 12:20 AM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு பொதுவிநியோக ஊழியா் சங்க தென்மண்டல மாநாடு நாகா்கோவிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத் தலைவா் ஜெய்சன் மகேஷ் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் பால்ராஜ், மாநிலப் பொதுச்செயலா் குமரி செல்வன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

நியாயவிலைக் கடைகளைத் தனித் துறையாக மாற்ற வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். முதல்வரால் அறிவிக்கப்பட்ட, நியாயவிலைக் கடைகளில் பாக்கெட் முறையை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

சிறப்பு விருந்தினராக நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் பங்கேற்று, 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தோ்வுகளில் அதிக மதிப்பெண் பெற்ற பொது விநியோகத் துறை ஊழியா்களின் குழந்தைகளுக்கு பரிசுகளையும், ஏழை, எளிய மாணவா்களுக்கு பள்ளிச் சீருடைகளையும் வழங்கிப் பேசினாா். மாநகராட்சி மண்டலத் தலைவா் அகஸ்டினா கோகிலவாணி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT