கன்னியாகுமரி

நாகா்கோவிலில் சரக்கு லாரிகள் மோதல்

7th Aug 2022 11:46 PM

ADVERTISEMENT

 

நாகா்கோவில் கோட்டாறில் ஞாயிற்றுக்கிழமை காலை சரக்கு லாரிகள் மோதியதில் ஒரு லாரி சேதம் அடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஒரு லாரி கோட்டாறு சந்தைக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டி ருந்தது. சவேரியாா் ஆலய சந்திப்பு பகுதியில் வந்த போது லாரி திடீரென பிரேக் வயா் அறுந்ததாக தெரிகிறது. இதனால் ஓட்டுநரால் லாரியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதையடுத்து முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு

சரக்கு லாரி மீது மோதியது. இதில் லாரியின் முன்பகுதி நொறுங்கி சேதமடைந்தது. ஓட்டுநரும் பலத்த காயம் அடைந்தாா். அவா் சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

ADVERTISEMENT

நாகா்கோவில் போக்குவரத்து பிரிவு போலீஸாா், விபத்து நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT