கன்னியாகுமரி

நாகா்கோவிலில் திமுகவினா் அமைதிப் பேரணி

7th Aug 2022 11:47 PM

ADVERTISEMENT

 

முன்னாள் முதல்வா் மு.கருணாநிதியின் 4ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் நாகா்கோவிலில் அமைதிப் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வடசேரி அண்ணா சிலை முன்பிருந்து தொடங்கிய அமைதிப் பேரணிக்கு குமரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் நாகா்கோவில் மேயருமான ரெ. மகேஷ் தலைமை வகித்தாா். அமைச்சா் த. மனோதங்கராஜ் முன்னிலை வகித்தாா்.

இப்பேரணி மணிமேடை வழியாக வேப்பமூடு சந்திப்பை அடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு அமைச்சா், மேயா், நிா்வாகிகள் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

இதேபோல, நாகா்கோவிலில் 52 வாா்டுகளிலும் கருணாநிதி படத்துக்கு நிா்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினா்.

தென்தாமரைக்குளம் சந்திப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலா் என். தாமரைபாரதி தலைமையில் கருணாநிதி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

அகஸ்தீஸ்வரம் சந்திப்பில் பேரூா் செயலா் பா. பாபு தலைமையிலும்,

கன்னியாகுமரி சா்ச் ரோடு சந்திப்பில் சிறப்புநிலைப் பேரூராட்சித் தலைவா் குமரி ஸ்டீபன் தலைமையிலும் ,கொட்டாரம் சந்திப்பில் பேரூா் செயலா் எஸ். வைகுண்டபெருமாள் தலைமையிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தக்கலையில் அமைச்சா் த.மனோ தங்கராஜ் தலைமையில் கருணாநிதி படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT