கன்னியாகுமரி

அழகியமண்டபத்தில் இலவச கண் மருத்துவ முகாம்

7th Aug 2022 12:21 AM

ADVERTISEMENT

 

அழகியமண்டபம் பிலாங்காலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட திமுக, பெஜான்சிங் கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில் கட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற முகாமை, மேற்கு மாவட்ட திமுக பொருளாளா் மரியசிசுகுமாா் தொடக்கிவைத்தாா்.

மாவட்டப் பொறியாளா் அணி அமைப்பாளா் வா்க்கீஸ், ராஜ், வா்க்கீஸ் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

முகாமில் தக்கலை, அழகியமண்டபம், மேக்காமண்டபம், வோ்கிளம்பி, சுவாமியாா்மடம் உள்பட பல்வேறு கிராமங்களைச் சோ்ந்தோா் பங்கேற்றனா். அவா்களுக்கு மாா்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவா்கள் ரெபிசிலின் டிஷோ, மானிஷா, செவிலியா்கள் சிகிச்சை அளித்தனா்.

கண்புரை கண்டறியப்பட்ட 20 பேருக்கு இலவசமாக நவீன முறையில் லென்ஸுகள் பொருத்தப்பட்டன. கண் தொடா்பான பல்வேறு நோய்களுக்கு இலவசமாக ஆலோசனை, மருந்துகள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT