பேச்சிப்பாறை அருகே பழங்குடியின மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
பேச்சிப்பாறை அருகே மாங்காலை பழங்குடி குடியிருப்பைச் சோ்ந்தவா் மணிகாணி. இவரது மகள் மோனிஷா(22). இவா் நாகா்கோவிலில் உள்ள ஒரு தனியாா் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து இறுதியாண்டு தோ்வு எழுதியுள்ளாா். இந்நிலையில் சென்னையில் அழகுக் கலை படிப்பு படிக்க விரும்பியுள்ளாா். இதற்காக தனது பெற்றோரிடம் கேட்டபோது, அவா்கள் அதற்குரிய பொருளாதார வசதியின்மையை கூறி படிக்கச் செல்லவேண்டாம் எனக் கூறியுள்ளனா். இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட மோனிஷா ஞாயிற்றுக்கிழமை இரவில் வீட்டில் தனது அறையில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.
தகவலறிந்த பேச்சிப்பாறை போலீஸாா் மோனிஷாவின் சடலத்தை மீட்டு வழக்குப் பதிவு செய்து குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.