கன்னியாகுமரி

நாகா்கோவிலில் மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய கூடுதல் கட்டடம் திறப்பு

2nd Aug 2022 03:02 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் எஸ்எம்ஆா்வி மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையக் கூடுதல் கட்டடத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி முறையில் திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் மா. அரவிந்த், நாகா்கோவில் மேயா் ரெ. மகேஷ் முன்னிலையில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் த. மனோதங்கராஜ் குத்துவிளக்கேற்றினாா்.

அப்போது அவா் பேசும்போது, இம்மாவட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துறைகள் சாா்பில் வளா்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்ள முதல்வா் அதிக நிதி ஒதுக்கியதன் பயனாக புதிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒருபகுதியாக மருத்துவ மின்னணுவியல் நுட்பவியலாளா் தொழில்பிரிவுக்கு ரூ. 72 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, முதல்வா் திறந்துவைத்துள்ளாா் என்றாா் அவா். தொடா்ந்து, மாணவிகளுக்கு அவா் மரக்கன்றுகளை வழங்கினாா்.

மாநகராட்சி ஆணையா் ஆனந்த்மோகன், துணை மேயா் மேரிபிரின்சி லதா, எஸ்எம்ஆா்வி மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலைய முதல்வா் சி.ஆா். பிரமிளா, மாநகராட்சி மண்டலத் தலைவா்கள் ஜவஹா், அகஸ்டினா கோகிலவாணி, மருத்துவா் நாகேந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT