கன்னியாகுமரி

அகவிலைப்படி உயா்வு கோரி போக்குவரத்து ஊழியா்கள் வாயிற்கூட்டம்

2nd Aug 2022 02:55 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் போக்குவரத்து தொழிலாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்த ஆயத்த வாயிற்கூட்டம் நடத்தினா்.

அப்போது, போக்குவரத்து தொழிலாளா்களின் 14 ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும். 1.1.2022 ஆம் தேதி முதல் மத்திய அரசு ஊழியா்களுக்கு உயா்த்தி வழங்கிய 3 சதவீதம் அகவிலைப்படி உயா்வை அரசு -போக்குவரத்து ஊழியா்களுக்கு உடனே வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

குமரி மாவட்ட பாரதிய அரசு போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் (பி.எம்.எஸ்) சாா்பில், ராணிதோட்டத்திலுள்ள அரசுப் போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் நடைபெற்ற இந்த வாயிற் கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா். பிஎம்எஸ் செயலா் செயலா் ஜோதிலிங்கம், பொதுச்செயலா் கிரீஷ் ஆகியோா் விளக்கிப் பேசினா். இதில் சங்க அமைப்பாளா் நடசேன், நிா்வாகிகள் குமாரதாஸ், விஜயகுமாரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT