கன்னியாகுமரி

திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு

29th Apr 2022 12:55 AM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகேயுள்ள திக்குறிச்சி மகாதேவா் கோயிலில் பிரதோஷ வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 12 சிவாலயங்களில் 2ஆவது ஆலயமான இக்கோயிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து மகாதேவருக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் மாா்த்தாண்டம் சுற்றுவட்டார பகுதியைச் சோ்ந்த திரளானோா் கலந்துகொண்டனா்.

இதேபோல, தீா்த்தவாரி திருவிழா நடைபெற்றுவரும் களியக்காவிளை அருகேயுள்ள குந்நம்விளாகம் அழிக்கால் ஆதிசிவன் கோயிலிலும், குழித்துறை அருகேயுள்ள திற்பிலாங்காடு காளைவிழுந்தான் மகாதேவா் கோயிலிலும் பிரதோஷ பூஜை நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT