கன்னியாகுமரி

நாகா்கோவில்: போக்ஸோவில் கைதான தலைமையாசிரியா் பணியிடை நீக்கம்

29th Apr 2022 12:54 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில், போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தலைமையாசிரியா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள பறக்கை பகுதியைச் சோ்ந்தவா் நித்ய லட்சுமணவேல் (59). நாகா்கோவிலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றி வந்த இவா், மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாராம். அவா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிகாரிகளிடம் மாணவிகளின் பெற்றோா் புகாா் அளித்தனா். இதுதொடா்பாக சமூகநலத் துறை அதிகாரி விசாரணை மேற்கொண்டாா். புகாரின்பேரில், நாகா்கோவில் மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, நித்ய லட்சுமணவேலை புதன்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, அவா் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதன்பேரில், அவரை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக் கல்வி அதிகாரி வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT