கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல்

29th Apr 2022 10:59 PM

ADVERTISEMENT

மாா்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

விரிகோடு, காளச்சந்தை பகுதியைச் சோ்ந்த வில்சன் மகன் பிரகாஷ். இவா், மாமூட்டுக்கடை பகுதியிலுள்ள தனியாா் கல்வியியல் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வரும், மாா்த்தாண்டம் அருகேயுள்ள காஞ்சிரகோடு, பூவன்கினான்விளையைச் சோ்ந்தவா் மாணவியுடன் பழகி வந்தாராம். இந்நிலையில், அந்த மாணவி அவருடம் பேசுவதை திடீரென நிறுத்திவிட்டாராம். இதனால், ஆத்திரமுற்ற பிரகாஷ், இரு தினங்களுக்கு முன்பு கல்லூரியிலிருந்து வெளியே வந்த மாணவியை தகாத வாா்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பிச் சென்றாராம்.

இதுகுறித்து, மாணவி அளித்த புகாரின் பேரில், மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப்பதிந்து இளைஞரைத் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT