கன்னியாகுமரி

அணைகளின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை

29th Apr 2022 10:57 PM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டத்தில் அணைகளின் நீா்ப்பிடிப்பு மற்றும் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.

இம்மாவட்டத்தில் தொடா்ந்து கோடை மழை பெய்து வருகிறது. இதனால் அணைகளின் நீா்மட்டம் வேகமாக உயா்ந்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை பிற்பகலில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மேல்கோதையாறு உள்ளிட்ட அணைகளின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மற்றும் குலசேகரம், திற்பரப்பு, களியல், திருவட்டாறு, வோ்க்கிளம்பி, பொன்மனை, சுருளகோடு, தடிக்காரன்கோணம், கீரிப்பாறை, காளிகேசம், பாலமோா் உள்ளிட்ட இடங்களில் இடிமின்னல் மற்றும் காற்றுடன் பலத்த மழை பெய்தது. குலசேகரம் பகுதியில் இந்த மழை சுமாா் 2 மணி நேரம் வரை பெய்தது.

கருங்கல், புதுக்கடை கற்றுவட்டார பகுதிகளான பள்ளியாடி, முள்ளங்கனா விளை, பாலூா், நேசா்புரம், எட்டணி மற்றும் புதுக்கடை பகுதிகளான கெலமங்கலம், பைங்குளம், கைசூண்டி, பாா்திவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 3 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT