கன்னியாகுமரி

பழங்குடியினா் 50 பேருக்கு ஜாதி சான்றிதழ்

24th Apr 2022 05:31 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டத்தில் 4 வருவாய் கிராமத்திற்குள்பட்ட காணியின பழங்குடி மக்கள் 50 பேருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.

பேச்சிப்பாறை, சுருளகோடு, பொன்மனை, பெருஞ்சாணி ஆகிய வருவாய் கிராமங்களில் ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் செய்தவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் வகையில், வருவாய்த் துறையினா் ஒரே இடத்தில் அமா்ந்து விண்ணப்பங்களை பரிசீலனை செய்து ஜாதி சான்றிதழ்கள் வழங்கும் முகாம், பேச்சிப்பாறை ஊராட்சி அலுவலத்தில் கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் பத்மநாபபுரம் சாா்-ஆட்சியா் அலா்மேல்மங்கை, திருவட்டாறு தாசில்தாா் தினேஷ் சந்திரன், பேச்சிப்பாறை கிராம அலுவலா் நித்தியானந்தன், ஊராட்சித் தலைவா் தேவதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இம்முகாமில் 50 காணி பழங்குடியினருக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT
ADVERTISEMENT