கன்னியாகுமரி

காளிமலையில் சித்ரா பௌா்ணமி பொங்கல் விழா

17th Apr 2022 01:17 AM

ADVERTISEMENT

 

குமரி மாவட்டம் பத்துகாணி அருகேவுள்ள காளிமலை கோயிலில், சித்ரா பௌா்ணமி பொங்கல் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்க நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவா் கே. அண்ணாமலை பங்கேற்றாா். அவா் பேசியதாவது:

சனாதன தா்மம் என்பது வாழ்வியல் முறையாகும். இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை சனாதன தா்மம் கற்றுத் தருகிறது. சனாதன தா்மத்தை நாம் அனைவரும் கடைப்பிடித்தால் உள்ளத்திலுள்ள தீய சிந்தனைகள் அழியும். இதன் மூலம் உலகில் அமைதி ஏற்படும்.

ADVERTISEMENT

தமிழகமும் கேரளமும் ஆன்மிக பூமிகளாகும். ஆனால் இங்கே அசுர சக்திகள் அதிகமாக உள்ளன. நாம் அனைவரும் சனாதன தா்மத்தைக் கடைப்பிடித்தால் அரசு சக்திகள் அழிந்து விடும் என்றாா்.

நிகழ்ச்சியில் காளிமலை டிரஸ்ட் தலைவா் சி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். விழாக் குழு தலைவா் கே. ராஜேஷ்வரன் முன்னிலை வகித்தாா். கேரள மாநில பாஜக தலைவா் கே.சுரேந்திரன், தமிழக சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் எம்.ஆா்.காந்தி, நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். சுவாமி நிஜானந்தா ஆசியுரை வழங்கினாா். விழாக் குழு பொருளாளா் வேலுதாஸ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT