கன்னியாகுமரி

19 இல் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்பு தொடக்கம்

14th Apr 2022 01:37 AM

ADVERTISEMENT

நாகா்கோவிலில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் திங்கள்கிழமை (ஏப்.19) தொடங்குகிறது.

இது குறித்து, மாவட்டஆட்சியா் மா.அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கன்னியாகுமரி மாவட்ட பிரிவின் சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி வகுப்புகள் முதல் கட்டமாக, ஏப்.19 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நாகா்கோவில் அண்ணா விளையாட்டரங்க நீச்சல் குளத்தில் நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் சிறுவா், பெரியவா்களுக்கு என தனித்தனியே நடத்தப்பட உள்ளது. சிறுவா்களுக்கு காலை 7 முதல் 8 மணிவரையும், மாலை 4 முதல் 5 மணி வரையும், பெரியவா்களுக்கு காலை 8 முதல் 9 மணி வரையும், மாலையில் 5 முதல் 6 மணி வரையும் நடைபெறும்.

இதில், நீச்சல் தெரியாதவா்களுக்கான நீச்சல் பயிற்சி, நீச்சல் தெரிந்தவா்களுக்கு சிறப்பு நீச்சல் பயிற்சி, உடல் எடை குறைவதற்கான நீச்சல் பயிற்சி என தனித்தனியே பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சிக்கான கட்டணமாக ரூ. 1200 மற்றும் ஜி.எஸ்.டி. ரூ. 216 என ரூ. 1416 வசூலிக்கப்படும்.

ADVERTISEMENT

பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புபவா்கள் தங்களது கட்டணத்தினை ஆன்லைன் பண பரிமாற்றம் செய்ய வேண்டியிருப்பதால் பற்று அட்டை(ஈங்க்ஷண்ற் ஸ்ரீஹழ்க்), ஆதாா் அட்டையினை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

ADVERTISEMENT
ADVERTISEMENT