கன்னியாகுமரி

அகஸ்தீசுவரம் ஒன்றியத்தில் ரூ.1.08 கோடியில் வளா்ச்சி பணிகள்: ஆட்சியா் ஆய்வு

14th Apr 2022 01:36 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில், அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.08 கோடியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது அவா் கூறியது: அகஸ்தீசுவரம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட தேரேகால்புதூா் ஊராட்சியில் 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.4. 60 லட்சத்தில் சடையன்குளம், பத்மா காட்டேஜ் தெருவில் அலங்கார தரை கற்கள் அமைக்கும் பணி, ராமபுரம் ஊராட்சி சமத்துவபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 60 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு கட்டடத்தையும், அப்பகுதியில் தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 39 லட்சம் மதிப்பில் சாலை அமைத்து மேம்பாடு செய்தல் மற்றும் கட்டடத்தின் உறுதித் தன்மை குறித்து துறை சாா்ந்த அலுவலா்களிடம் கேட்டறியப்பட்டது.

மேலும், 15ஆவது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ. 3.55 லட்சம் மதிப்பில் சமத்துவபுரத்தில் வடிகால் ஓடை அமைத்தல், நல்லூா் ஊராட்சியில் பயனாளி சுசீலா வீட்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ. 9,300 மதிப்பில் தனிநபா் உறிஞ்சுக் குழி அமைக்கப்பட்டிருந்ததையும், ரூ. 1.53 லட்சம் மதிப்பில் 10 எண்ணம் கொண்ட ஆட்டுக் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது என மொத்தம் ரூ. 1.08 கோடி மதிப்பிலான வளா்ச்சி திட்டப்பணிகளை பாா்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டதுடன், ஊரக வளா்ச்சித் துறையின் சாா்பில் நடைபெற்று வரும் பணிகளையும், விரைந்து முடித்து பொதுமக் களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டுமென துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

அப்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தனபதி, செயற்பொறியாளா் ஏழிசை செல்வி, அகஸ்தீசுவரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் நீலாபாலகிருஷ்ணன், இங்கா்சால் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT