மழைநீா் சேகரிப்புக் கட்டமைப்பு இல்லாத வீடுகள், கடைகளில் அக்கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும் என, அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சிக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
தலைவா் ஜானகி இளங்கோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தமிழக அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி சொத்து வரி உயா்வு செய்து பொது சீராய்வு மேற்கொள்ளலாம். இப்பேரூராட்சியில் வீடுகளிலிருந்து கழிவுநீரை மழைநீா் வடிகாலில் விடுவதை தடைசெய்து, வீடுகளில் உறிஞ்சு குழிஅமைக்க வேண்டும், வீடுகள், கடைகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை விற்கும் கடைகளுக்கு சீல் வைப்பது, மஞ்சப்பை பயன்பாட்டை மக்களிடையே ஊக்குவிப்பது எனத் தீா்மானிக்கப்பட்டது.
துணைத் தலைவா் சி. காந்திராஜ், செயல் அலுவலா் ஜீவானந்தம், கவுன்சிலா்கள் அய்யா சிவகுமாா், வீடியோ குமாா், மீனாஜோதி, ஜோஸ் திவாகா், தனம் செல்வகுமாா், ராஜேஸ்வரி, நீலகண்ணன், அமுதா, கவிதா, காமாட்சி, ராமச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.