கன்னியாகுமரி

மாணவா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு வருகை

12th Apr 2022 03:10 AM

ADVERTISEMENT

 

கல்குறிச்சி புனித ஜோசப் நடுநிலைப் பள்ளியில், உயா்கல்வி இட ஒதுக்கீட்டில், அரசு உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவா்கள், ஆசிரியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து திங்கள்கிழமை பள்ளிக்கு வந்தனா்.

உயா்கல்வி இடஒதுக்கீட்டில் உதவிபெறும் பள்ளி மாணவா்களுக்கு உள்ஒதுக்கீடு மற்றும் மாணவா்களுக்கு ரூ . ஆயிரம் ஊக்கத்தொகை, அரசு அனுமதித்த காலிப் பணியிடங்களில் ஊதியமின்றி உழைத்து வரும் ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்கவேண்டும்.

31.03.2021 நாளிட்ட சென்னை உயா் நீதிமன்றம் மதுரை அமா்வு வழங்கிய தீா்ப்பை முழுமையாக செயல்படுத்தக் கேட்டு திங்கள்கிழமை அனைத்து ஆசிரியா்களும், மாணவா், மாணவிகள் கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு வந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT