திற்பரப்பு அருவிப் பகுதியில் சுற்றுலாப் பயணியின் காரிலிருந்து கைப்பேசி, ரொக்கப் பணத்தைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
திற்பரப்பு அருவியில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். வாகன நிறுத்துமிடத்தில் போதிய இடமில்லாததால், இவா்கள் தங்களது வாகனங்களை சாலையோரங்களில் நிறுத்தியிருந்தனா்.
தூத்துகுடி மாவட்டம் புதியம்புத்தூா் பகுதியிலிருந்து 8 பேருடன் வந்த சுற்றுலாப் பயணி ஒருவா், தனது காரை சாலையோரம் நிறுத்தி, உடன் வந்தோருடன் அருவியில் குளிக்கச் சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது காரிலிருந்த 3 விலை உயா்ந்த கைப்பேசிகள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் குலசேகரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
ADVERTISEMENT