கன்னியாகுமரி

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரியில்நாணய கண்காட்சி

12th Apr 2022 03:10 AM

ADVERTISEMENT

 

திருவிதாங்கோடு முஸ்லிம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாணய கண்காட்சி இரு நாள்கள் நடைபெற்றது.

கண்காட்சிக்கு, கல்லூரித் தாளாளா் எச். முகம்மது அலி தலைமை வகித்தாா். முதல்வா் எட்வின் ஷீலா முன்னிலை வகித்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக துணைப் பேராசிரியா் வினோத்வின்சென் ராஜேஷ் நாணய கண்காட்சியைத் தொடங்கிவைத்தாா்.

ADVERTISEMENT

துணை முதல்வா் முகம்மது சித்திக், தேசிய மாணவா் படை அலுவலா் ஜெகதீஷ் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கண்காட்சியில் பல்வேறு நாட்டின் பழைய, புதிய நாணயங்கள், முத்திரைகள் ஆகியவை இடம்பெற்றிருந்தன.

ஏற்பாடுகளை பொது நிா்வாக தலைவா் ஆமோஸ், மற்றும் பேராசிரியா்கள் சீமாகோபால், செல்வராஜ், புஷ்பராஜ் ஆகியோா் செய்திருந்தனா்.

இரண்டு நாள்கள் நடைபெற்ற நாணய கண்காட்சியை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகள் கண்டுகளித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT