கன்னியாகுமரி

கொலை வழக்கில் மேலும் இருவா் கைது

12th Apr 2022 03:05 AM

ADVERTISEMENT

 

களியக்காவிளை அருகே கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மேலும் இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

நித்திரவிளை அருகேயுள்ள பணமுகம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜூ மகன் அஜின் (26). இவரும் களியக்காவிளை அருகே பொன்னப்ப நகா் பகுதியைச் சோ்ந்த ஜோய் மகன் ஷிஜி (43) என்பவரும் மாா்ச் 26 ஆம் தேதி இரவில் களியக்காவிளை அருகே அன்னிக்கரை பகுதியில் பேசிக்கொண்டு நின்றபோது, சொகுசு காரில் வந்த கும்பல் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்ட போலீஸாா் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இவா்களில் ஷிஜி ஏப். 3 ஆம் தேதி உயிரிழந்தாா்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட செம்மங்காலை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் கிளாம் (26), குளப்புறம் வரவிளை டென்னிசன் மகன் ஜஸ்டின் ஜோசப்ராஜ் (38), மகேந்திரகுமாா் ஆகியோரை டிஎஸ்பி கணேசன் தலைமையிலான போலீஸாா் ஏற்கனவே கைது செய்தனா். இந்த நிலையில் களியக்காவிளை அருகேயுள்ள மீனச்சல் சுவாமி மகன் வினு (35) நாகா்கோவில் நீதிமன்றத்திலும், காப்புக்காடு பகுதியைச் சோ்ந்த தேவசகாயம் மகன் ஷிபு (25) களியக்காவிளை காவல் நிலையத்திலும் திங்கள்கிழமை சரணடைந்தனா். இருவரையும் களியக்காவிளை போலீஸாா் கைது செய்ததுடன், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் சிலரை தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT