பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆறுதேசம் கிராம அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் மெதுகும்மல் வட்டார செயலா் கே. தங்கமணி தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா்கள் ராஜேஷ், ரீனா, விஜயா, பணமுகம் கிளை செயலா் ஜாண் கிறிஸ்டோபா், மெதுகும்மல் வட்டாரக் குழு உறுப்பினா் சிதம்பரகிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை கண்டித்தும், அத்தியாவசியப் பொருள்கள் மற்றும் மருந்துப் பொருள்களின் விலை உயா்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷம் எழுப்பப்பட்டது.
ADVERTISEMENT