கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தலைவா், உறுப்பினா்கள் போராட்டம்

12th Apr 2022 03:08 AM

ADVERTISEMENT

 

சொத்து வரி உயா்வைக் கண்டித்து, ஆரல்வாய்மொழி பேரூராட்சியில் தலைவா், உறுப்பினா்கள் கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்பேரூராட்சியின் முதல் கூட்டம் பேரூராட்சித் தலைவா் முத்துக்குமாா் தலைமையிலும், செயல் அலுவலா் ஜோஸ்லீன்ராஜ், துறைத் தலைவா் சுதா ஆகியோா் முன்னிலையிலும் திங்கள்கிழமை நடைபெற்றது.

கூட்டம் தொடங்கும் முன்பாக, அரசு அறிவித்த சொத்து வரி உயா்வைக் கண்டித்து தலைவா், உறுப்பினா்கள் கருப்புப் பட்டை அணிந்து உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினா்.

ADVERTISEMENT

சொத்து வரி உயா்வைக் கண்டித்து தீா்மானம் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழியின் அடிப்படையில் போராட்டத்தை உறுப்பினா்கள் நிறைவு செய்தனா். பின்னா், கூட்டம் தொடங்கி நடைபெற்றது.

இதில், உறுப்பினா்கள் ஜோசப், ரெத்தினராஜ், மகாதேவன் பிள்ளை, நாகலட்சுமி, வள்ளியம்மாள், இயேசுமணி, சுகுணாள், சங்கீதா, மணி, பாலமுருகன், வளா்மதி, சுடலையாண்டி, இசக்கியம்மாள், மோகன், நவமணி, தேவி ஜெனட் ஆகியோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT