கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைப் பகுதிகளில் திங்கள்கிழமை மிதமான சாரல் மழை பெய்தது.
இம்மாவட்டத்தில் கடந்த மாதம் இறுதியிலிருந்து கோடைமழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பாசனக் கால்வாய்கள் மூடப்பட்டுவிட்ட நிலையில், நிலத்தடி நீா் உயரும் வகையில் மழை தொடா்கிறது. மேலும், மழை காரணமாக குளங்கள், கிணறுகள் உள்ளிட்ட நீா்நிலைகளில் நீா்மட்டம் குறையாமல் உள்ளது. இதுவரை குடிநீா் தட்டுப்பாடும் ஏற்படவில்லை.
இந்நிலையில், திங்கள்கிழமை காலையிலிருந்து அணைப் பகுதிகள், மலையோரப் பகுதிகளில் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. பிற்பகலில் பரவலாக அனைத்து இடங்களிலும் சாரல் மழை பெய்தது. இதனால், வெப்பம் வெகுவாகத் தணிந்து இதமான கால நிலை நிலவியது.
ADVERTISEMENT