கன்னியாகுமரி

பேச்சிப்பாறை அருகேமரம் சாய்ந்து வீடு இடிந்தது:மூதாட்டி காயம்

5th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

 பேச்சிப்பாறை அருகே மரம் முறிந்து விழுந்து வீடு இடிந்ததில் மூதாட்டி பலத்த காயமடைந்தாா்.

பேச்சிப்பாறை அருகேயுள்ள வெட்டிமுறிச்சான் கால்வாய் கரையோர பகுதியில் வசித்து வந்தவா் சுசீலா (60). கணவரை இழந்தவா். ஒரு மகனும் மகளும் உள்ளனா். மகளுக்கு திருமணம் ஆகி வெளியூரில் வசித்து வருகிறாா்.

பேச்சிப்பாறை ஊராட்சியில் 100 நாள் வேலைஉறுதித் திட்டத்தில் வேலை செய்துவந்த சுசிலா, ஞாயிற்றுக்கிழமை மாலை வீட்டிலிருந்தபோது சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. அப்போது, அப்பகுதியிலிருந்த மரத்தின் கிளை முறிந்து வீட்டின் மீது விழுந்தது. அதில், வீட்டுச்சுவா் இடிந்ததுடன், உள்ளே இருந்த சுசீலா பலத்த காயம் அடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு குலசேகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இது குறித்து பேச்சிப்பாறை போலீஸாரும், கிராம நிா்வாக அலுவலரும் விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT