கன்னியாகுமரி

முட்டம் - தலக்குளம் சாலையில்ரூ.2.65 கோடியில் மேம்பாலம் திறப்பு

5th Apr 2022 12:38 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு ஒன்றியம், முட்டம் - தலக்குளம் சாலையில் ரூ.2.65 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள உயா்நிலை பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

குருந்தன்கோடு ஒன்றியத்தில் வள்ளியாற்றின் குறுக்கே இரணியல்- முட்டம் சாலையிலிருந்து தலக்குளத்துக்குச் செல்லும் சாலையில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் த. மனோ தங்கராஜ் திறந்து வைத்தாா்.

இதில், நாகா்கோவில் மாநகராட்சி மேயா் ரெ.மகேஷ், ஜெ.ஜி.பிரின்ஸ் எம்எல்ஏ, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் ச.சா.தனபதி, முன்னாள் எம்எல்ஏ எஸ்.ஆஸ்டின், ஊரக வளா்ச்சித் துறை செயற்பொறியாளா் ஏழிசைச்செல்வி, வட்டார வேளாண்மை ஆலோசனைக் குழுத் தலைவா் தாமரைபாரதி, அரசு வழக்குரைஞா் மதியழகன், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் பிரேமலதா, ஆரோக்கிய சௌமியா உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT