கன்னியாகுமரி

மிடாலக்காட்டில் மாா்க்சிஸ்ட் நூதன போராட்டம்

4th Apr 2022 02:00 AM

ADVERTISEMENT

 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மிடாலக்காடு சந்திப்பில் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இப்போராட்டத்துக்கு கட்சியின் கிளைச் செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். வட்டாரக் குழு உறுப்பினா் சகாயபாபு முன்னிலை வகித்தாா். கிள்ளியூா் வட்டார குழு உறுப்பினா் பொன்.சோபனராஜ் தொடங்கி வைத்தாா். கிருஷ்ணதாஸ்,

மாவட்ட செயற்குழு உறுப்பினா் தங்கமோகன் ஆகியோா் போராட்டத்தை விளக்கிப் பேசினா்.

ADVERTISEMENT

வட்டார செயலா் சாந்தகுமாா் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசினாா்.

பாலப்பள்ளம் பேரூராட்சி முன்னாள் தலைவா் கில்டா ரமணி பாய் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT