கன்னியாகுமரி

விளவங்கோடு தொகுதியில் ரூ. 2.3 கோடியில் சாலைப் பணி: எம்எல்ஏ தகவல்

2nd Apr 2022 07:55 AM

ADVERTISEMENT

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பேரூராட்சிகளில் ரூ. 2.30 கோடியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளதாக இத் தொகுதி எம்எல்ஏ எஸ். விஜயதரணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நபாா்டு வங்கி நிதி உதவியில் சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாடு நிதியின் கீழ் இடைக்கோடு பேரூராட்சி கல்லுப்பாலம் முதல் மடத்துவிளை சா்ச் செல்லும் ஒன்றே முக்கால் கி.மீ தூர சாலையை மேம்பாடு செய்து சீரமைக்க ரூ. 70 லட்சம், அருமனை பேரூராட்சி ஊந்தூணி - திற்பரப்பு பாா்க் செல்லும் சாலை மற்றும் மானசேகரம் - திற்பரப்பு இணைப்பு சாலையில் பாலம் அமைத்து 1.5 கி.மீ தூர சாலையை சீரமைக்க ரூ. 60 லட்சம், உண்ணாமலைக்கடை பேரூராட்சி தாமரைகுளம் முதல் குன்னம்பாறை செல்லும் இணைப்பு சாலை, சிராயன்குழி - குன்னம்பாறை இணைப்புச் சாலை 1.5 கி.மீ தூரம் சீரமைக்க ரூ. 50 லட்சம், நல்லூா் பேரூராட்சியில் 1.5 கி.மீ தூரம் கொண்ட ஐரேனிபுரம் - சானல்முக்கு சாலையை சீரமைக்க ரூ. 50 லட்சம் என சாலைப் பணிகளுக்கு ரூ. 2.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என எஸ். விஜயதரணி எம்எல்ஏ தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT