கன்னியாகுமரி

கருங்கல் அருகே மோட்டாா் சைக்கிள் திருட்டு

2nd Apr 2022 07:54 AM

ADVERTISEMENT

கருங்கல் அருகே உள்ள புனந்திட்டையில் வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த பைக்கை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸார தேடி வருகின்றனா்.

கருங்கல் புனந்திட்டை ஞானப்பிரகாசம் மகன் பென்னட்(44). இவா் வெள்ளிக்கிழமை தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் வெளியே நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது அதனை காணவில்லையாம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT