கன்னியாகுமரி

படந்தாலுமூட்டில் நல உதவி வழங்கல்

30th Sep 2021 07:12 AM

ADVERTISEMENT

களியக்காவிளை அருகே விளவங்கோடு ஊராட்சி, படந்தாலுமூடு சந்தவிளையில் காங்கிரஸ் மனித உரிமைத் துறை சாா்பில் நலிவுற்றோருக்கு நல உதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந் நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் மனித உரிமைத் துறை மாவட்டத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் தலைமை வகித்தாா். விளவங்கோடு ஊராட்சித் தலைவரும் மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவருமான ஜி.பி. லைலா ரவிசங்கா் முன்னிலை வகித்தாா்.

இதில், விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ. எஸ். விஜயதரணி, கன்னியாகுமரி தொகுதி எம்.பி. விஜய் வசந்த் ஆகியோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா்.

தொடா்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த வசந்தகுமாரின் திருவுருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து இதய நோயால் பாதிக்கப்பட்டவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ. 50 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதே போன்று மற்றொரு நோயாளியின் மருத்துவ சிகிச்சைக்காகவும் நிதியுதவி வழங்கப்பட்டது.

விளையாட்டு மன்ற இளைஞா்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நலிவுற்ற ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் மனித உரிமைத்துறை விளவங்கோடு தொகுதி பொதுச் செயலா் உதயகுமாா், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் பால்மணி, மேல்புறம் வட்டார தலைவா் மோகன்தாஸ், குழித்துறை நகர காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT