கன்னியாகுமரி

குமரி குகநாதீஸ்வரா் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

30th Sep 2021 07:13 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரி அருள்மிகு குகநாதீஸ்வரா் கோயிலில் புதன்கிழமை 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. சமூக இடைவெளியுடன் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகில் 1000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த குகநாதீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று 1008 சங்காபிஷேகம் நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு புரட்டாசி திருவாதிரை நாளான புதன்கிழமை அதிகாலை 5 மணிக்கு கணபதி பூஜை நடைபெற்றது. தொடா்ந்து 1008 சங்குகளை அடுக்கி வைத்து சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதில், பக்தா்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு கோயில் உள்பிரகாரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT