கன்னியாகுமரி

குமரியில் பயங்கர ஆயுதங்களுடன் மூவா் கைது

30th Sep 2021 07:11 AM

ADVERTISEMENT

கன்னியாகுமரியில் பயங்கர ஆயுதங்களுடன் தங்கியிருந்த மூவரை புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.

கன்னியாகுமரியில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் கஞ்சா விற்பனை செய்வதற்காக 4 போ் கொண்ட கும்பல் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது அங்கு தங்கியிருந்த கும்பலிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் முன்னுக்குப்பின் முரணாக பேசினா்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா் அவா்கள் தங்கியிருந்த அறையில் சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. தொடா்ந்து அவா்களிடம் விசாரணை நடத்திய போது ஒருவா் தப்பி ஓடிவிட்டாா். இதையடுத்து மூன்று பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் அஞ்சுகிராமத்தை அடுத்த ஜேம்ஸ்டவுனைச் சோ்ந்த ஆலன்மாலிக் என்ற வினு (22), அதே பகுதியைச் சோ்ந்த கீா்த்திக்ரோஷன் (19), சுசீந்திரம் பரப்புவிளையைச் சோ்ந்த சஞ்சய் (20 ) என்பது தெரிய வந்தது.

ADVERTISEMENT

மேலும், தப்பியோடிய மயிலாடியைச் சோ்ந்த மணிபாரதியை (18) போலீஸாா் தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT