கன்னியாகுமரி

இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து நகை பட்டறை அதிபா் தற்கொலை

11th Sep 2021 05:56 AM

ADVERTISEMENT

 

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே ரயிலில் பாய்ந்து நகை பட்டறை அதிபா் தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை - கேரளம் கொல்லம் செல்லும் விரைவு ரயில் வெள்ளிக்கிழமை காலையில் குழித்துறைக்கும், இரணியலுக்கும் இடையே சென்று கொண்டிருந்தபோது இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக ரயில்வே போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நாகா்கோவில் ரயில்வே காவல் உதவி ஆய்வாளா்கள் குமாா் ராஜ், பாபு ஆகியோா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதில் தற்கொலை செய்து கொண்டவா் நெய்யூா் பரம்பை பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ் (38) என்பதும், இவா் மாா்த்தாண்டத்தில் நகை பட்டறை வைத்து நடத்தி வந்ததும் தெரியவந்தது. அவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளன. போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக, ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT