கன்னியாகுமரி

கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 14 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

30th Oct 2021 04:59 AM

ADVERTISEMENT

கேரளத்துக்கு லாரியில் கடத்திச் செல்ல முயன்ற 14 டன் ரேஷன் அரிசியை மாா்த்தாண்டம் போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் டிஎஸ்பி யோகேஷ்குமாா்(பயிற்சி), உதவி ஆய்வாளா் ஜாண் கிறிஸ்துராஜ் மற்றும் போலீஸாா் மாா்த்தாண்டம் மேம்பாலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் வகையில் வந்த கேரள பதிவெண் கொண்ட லாரியை நிறுத்த சைகை காட்டினா். லாரி நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று, சிறிது தொலைவுக்குப் பின் லாரியை மடக்கிப் பிடித்தனா். தொடா்ந்து மேற்கொண்ட சோதனையில், லாரியில் 14 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. லாரி ஓட்டுநா் குலசேகரம் அருகேயுள்ள கோட்டூா்கோணம் ஜெயக்குமாா் மகன் ராஜசேகரை (29) பிடித்து விசாரணை மேற்கொண்டனா். இதில், ரேஷன் அரிசியை தூத்துக்குடியில் இருந்து கேரளத்துக்கு கொண்டு செல்வதாக தெரிவித்தாா்.

இதையடுத்து, ரேஷன் அரிசியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் லாரி ஓட்டுநரை கைது செய்தனா். தொடா்ந்து லாரியுடன் ரேஷன் அரிசி மற்றும் லாரி ஓட்டுநரை மாவட்ட உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT