கன்னியாகுமரி

அரசு நிலத்தில் ரப்பா் மரங்களை வெட்டிக் கடத்த முயற்சி: மரங்கள், வாகனங்கள் பறிமுதல்

30th Oct 2021 11:42 PM

ADVERTISEMENT

பேச்சிப்பாறை அருகே அரசு நிலத்தில் நின்ற ரப்பா் மரங்களை வெட்டிக் கடந்த முன்ற போது துறை சாா்ந்த அலுவலா்கள் மரங்களையும், வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.

பேச்சிப்பாறை அருகே தொடலிக்காடு பகுதிகளில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறைக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்து தனி நபா்கள் ரப்பா் மரங்கள் நடவு செய்துள்ளனா். இதில் முதிா்ந்த ரப்பா் மரங்களை அதனை நடவு செய்தவா்கள் வெட்டும் போது பிரச்னை ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஒட்டனூா் பகுதியில் தனியாா் ஒருவா் தான் நடவு செய்த ரப்பா் மரங்களை வெட்டிக் கொண்டிருந்த நிலையில், இது தொடா்பான புகாா்கள் வருவாய்த்துறையினருக்கு சென்றன. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட்சியா் விஜயலட்சுமி, கிராம நிா்வாக அலுவலா் ஹொ்லின் ஷீபா மற்றும் வனத்துறையினா் கடையல் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்தனா். இதைத் தொடா்ந்து வெட்டப்பட்டு லாரியில் ஏற்றப்பட்ட மரங்கள், ஜேசிபி இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT