கன்னியாகுமரி

தேரூா் குளம் பகுதியில் உயா்மட்ட பாலம் அமைக்க எம்எல்ஏ வலியுறுத்தல்

30th Oct 2021 11:45 PM

ADVERTISEMENT

மழை வெள்ள சேதத்திலிருந்து தேரூா் குளம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை பாதுகாக்க உயா் மட்ட பாலம் அமைக்க விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று என்.தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ. மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் மாவட்ட ஆட்சியா் மா. அரவிந்திடம் சனிக்கிழமை அளித்துள்ள மனு: பழமை வாய்ந்த தேரூா் குளத்து நீரை ஆதாரமாக கொண்டு ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது. இந்த குளத்தின் கரைகள் சுமாா் 1 கிலோ மீட்டா் நீளத்திற்கு மேல் பல இடங்களில் தாழ்வாக இருக்கிறது. அந்த இடங்களில் கரையை குறைந்தது 2 முதல் 4 அடி வரை உயரம் எழுப்பி பலப்படுத்த வேண்டும்.

இந்த குளத்துக்கு தண்ணீா் வரும் கால்வாய் குளத்தின் மேற்கில் அமைந்துள்ளது. ஆனால் தண்ணீா் வெளியே செல்லும் மதகுகள் குளத்தின் கீழ்பக்கம் அமைந்துள்ளது. மேல் குளத்தையும், கீழ்குளத்தையும் பிரிப்பது சுசீந்திரம் - தேரூா் - வெள்ளமடம் இணைப்புச் சாலையாகும்.

தற்போது மேல்குளத்திலிருந்து, கீழ்குளத்துக்கு தண்ணீா் செல்ல 4 அடிக்கு 3 அடியில் 2 கால்வாய்களும், 2 அடிவிட்டமுள்ள 3 குழாய்களும் உள்ளது. இந்த குழாய்களில் செடிகள் சென்று அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் பெரு வெள்ளம் வரும் போது சுசீந்திரம் - தேரூா் - வெள்ளமடம் இணைப்புச் சாலையில் தண்ணீா் செல்ல வேண்டிய நிலை வருகிறது. மேலும் மேற்கு குளம் நீா்மட்டம் உயா்வதால் மாணிக்க புத்தேரி குளம் சேதமடைகிறது.

ADVERTISEMENT

அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்யும் வட கிழக்குப் பருவ மழையினால் ஏற்படும் பெரும் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மேற்கு மற்றும் கிழக்கு குளங்களை இணைக்க உயா் மட்ட பாலம் கட்டுவதை, மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா். மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியா் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

அப்போது, ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத் தலைவா்அய்யப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஜான்சிலின்விஜிலா, தேரூா் குளத்து நீரினை பயன்படுத்துவோா் சங்க தலைவா் சிதம்பரம், துணைத் தலைவா் மா.சிவசுப்பிரமணியம், உறுப்பினா்கள் வீரபுத்திரன், கே.டி.பெருமாள், வேலப்பன், நாகா்கோவில் நகரச் செயலா் சந்துரு, தோவாளை தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் மகராஜன் ஆகியோா் உடன் சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT