கன்னியாகுமரி

குலசேகரம் அருகே ஆசிரியையிடம் சங்கிலி பறித்தவா் கைது

30th Oct 2021 11:46 PM

ADVERTISEMENT

குலசேகரம் அருகே தனியாா் பள்ளி ஆசிரியையிடமிருந்து தங்கச் சங்கிலியை பறித்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

குலசேகரம் அருகே மாடத்தூா்கோணம் பகுதியில் அண்மையில் சாலையில் நடந்து சென்ற தனியாா் பள்ளி ஆசிரியையிடமிருந்து மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா் பறித்துச் சென்றாா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து அந்த நபரைத் தேடி வந்தனா்.

இந்நிலையில் குலசேகரம் அருகே பிணந்தோடு பகுதியில் ஆளில்லாமல் பூட்டிக்கிடந்த வீட்டின் பூட்டை உடைத்து இரவு நேரத்தில் திருட முயன்ற நபரை அந்தப் பகுதியினா் பிடிக்க முயன்ற போது தப்பியோடி விட்டாா். இதையடுத்து, தடயவியல் துறையினா் தடயங்களை சேரித்து மேற்கொண்ட விசாரணையில், கொல்லங்கோடு மாா்த்தாண்டம் துறையைச் சோ்ந்த பாபு (36), இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT