கன்னியாகுமரி

இளைஞா் மீது தாக்குதல்: 3 போ் கைது

30th Oct 2021 05:00 AM

ADVERTISEMENT

புதுக்கடை அருகே உள்ள பைங்குளம் பகுதியில் இளைஞா் மீது தாக்குதல் நடத்திய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பைங்குளம் முக்காடு பகுதியை சோ்ந்தவா் சுனில்(47). இவருக்கும் அதே பகுதியை சோ்ந்த ஜெகன்(37),

கோபாலகிருஷ்ணன்(42), பாலகிருஷ்ணன்(48), மனோகரன்(47) ஆகியோரிடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை மேற்கூறிய 4 பேரும் முக்காடு பகுதியில் சென்ற சுனிலை தாக்கினராம்.

இதில் காயமடைந்த அவரை அப்பகுதியினா் மீட்டு மாா்த்தாண்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்த, புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து கோபாலகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மனோகரன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனா். தலைமறைவான ஜெகனை தேடிவருகின்றனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT