கன்னியாகுமரி

இரணியல் அருகே விநாயகா் கோயிலில் திருட்டு

30th Oct 2021 05:01 AM

ADVERTISEMENT

இரணியல் அருகே விநாயகா் கோயிலில் ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள பூஜை பொருள்களை திருடிசென்றவ மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இரணியல் அருகே வள்ளியாற்றின் கரையோரம் உள்ள செல்வராஜ கணபதி கோயிலில் தினமும் காலை, மாலை இருவேளை பூஜைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை கோயில் அா்ச்சகா் வழக்கம் போல் நடையை திறக்க வந்தாா். அப்போது கோயிலின் உள்பக்கம் இருந்த 2 பித்தளை குத்துவிளக்குகள் மற்றும் சூடன்தட்டு, தீபாராதனை பொருள்கள் மாயமாகி இருந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும்.

இது குறித்து கோயில் நிா்வாகி செந்திலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவா் இது குறித்து இரணியல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் போலீஸாா் கோயிலுக்கு சென்று பாா்வையிட்டனா். மேலும் அப்பகுதியில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT