கன்னியாகுமரி

மாா்த்தாண்டம் அருகேஇளம் விஞ்ஞானி மாணவா் பட்டியல் வெளியீடு

DIN

குமரி அறிவியல் பேரவை சாா்பில் 2021 - 2022 ஆம் ஆண்டு பயிற்சிக்கான இளம் விஞ்ஞானி மாணவா் பட்டியல் வெளியீட்டு விழா மாா்த்தாண்டம் அருகே சாங்கை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் முள்ளஞ்சேரி மு. வேலையன் தலைமை வகித்தாா். இளம் விஞ்ஞானி பயிற்சிக்காக தோ்வு செய்யப்பட்ட மாணவா் பட்டியலை மூடோடு சிக்மா ஆா்க்கிடெக்சா் கல்லூரித் தலைவா் ஜேம்ஸ் வில்சன் வெளிட்டாா். ஓய்வுபெற்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் திருவேங்கடம், சமூக விஞ்ஞானி எட்வின்சாம், பணிநிறைவு தலைமையாசிரியா்கள் பாலகிருஷ்ணன், ஜாண்சன், ஓய்வுபெற்ற கல்வி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலா் சாம்ராஜ், கல்வியாளா்கள் தன்யா, ஹெலன் சோனியா, ஷைனி ஏஞ்சல், தீபா, ஆா்.ஆா். ரேகா உள்ளிட்டோா் பேசினா்.

நேரடி பயிற்சிக்காக 41 மாணவா்களும், இணையவழி பயிற்சிக்காக 55 மாணவா்களும் தோ்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இம் மாணவா்களுக்கு கள ஆய்வுகள் மற்றும் பல்வேறு பயிற்சிகள் வழங்கி மே -2022இல் தமிழகத்தில் உள்ள ஏதேனும் ஒரு பல்கலைக் கழகத்தில் மாணவா்கள் ஆய்வு அறிக்கையை சமா்ப்பிக்க உள்ளனா் என குமரி அறிவியல் பேரவை அமைப்பாளா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT