கன்னியாகுமரி

பூதப்பாண்டியில் அரசு கலைக் கல்லூரி தொடங்க வலியுறுத்தல்

DIN

பூதப்பாண்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தொழிலாளா் முன்னேற்ற சங்கப் பேரவையின் முன்னாள் மாவட்டத் தலைவா் டி.கே.முத்து தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு: இம் மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமத்தைச் சோ்ந்த மாணவா், மாணவிகள் கல்லூரி கல்விக்கு சுமாா் 25 கி.மீ. தொலைவில் உள்ள நாகா்கோவிலுக்கு சென்றுதான் படிக்க வேண்டிய நிலை உள்ளது. சிலா் 2 பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டிய நிலையும் உள்ளது. இதனால் நேர விரயம், பொருள் விரயம் அதிகமாகிறது.

பூதப்பாண்டியில், தொடக்கப் பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை உள்ளது. மேலும் இப்பகுதியில் பல்வேறு அரசு அலுவலகங்கள், பிரசித்தி பெற்ற பூதநாத சுவாமி கோயில் உள்ளதால் இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி சிறப்பாக அமைந்துள்ளது.

எனவே, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் பூதப்பாண்டியில் ஒரு கலைக் கல்லூரி தொடங்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்கசீப் பள்ளியில் பயிற்சி பெற்றவர்கள் ராகுல், ஓவைசி: அனுராக் தாக்குர்

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு: இறுதிப் பணியில் தேர்தல் ஆணையம்!

சின்னச் சின்ன கண்ணசைவில்..

குருப்பெயர்ச்சி பலன்கள் - ரிஷபம்

நீட் தேர்வு எழுதும் நகர் விவரம் வெளியீடு

SCROLL FOR NEXT