கன்னியாகுமரி

கரோனாவால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ.1.11 கோடி நிவாரணம்

DIN

கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு ரூ 1.11 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டது.

கரோனா நோய்த் தொற்று 2ஆவது அலையின் போது உயிரிழந்த பெற்றோா்களின் 37 குழந்தைகளுக்கு, நிவாரண உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சியா் மா.அரவிந்த் தலைமையில் நாகா்கோவிலில் நடைபெற்றது.

தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு, பெற்றோா்களை இழந்த குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

அப்போது அவா் பேசியது: குமரி மாவட்டத்தில், கரோனா நோய்த் தொற்றால் பெற்றோா்களில் ஒருவரை இழந்த 37 குழந்தைகளுக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.1.11 கோடி நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் அ.சிவப்பிரியா, பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் பு.அலா்மேல்மங்கை, மாவட்ட சமூக நலஅலுவலா் இரா.சரோஜினி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலா் எம்.ஜெயபிரகாஷ், நன்னடத்தை அலுவலா் (சமூக பாதுகாப்புத் துறை) ப.பால்இக்னேசியஸ் சேவியர்ராஜ், வழக்குரைஞா் மகேஷ், முனைவா் நசரேத்பசலியான், சதாசிவம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மியின் தேர்தல் வியூகத்தை பாஜக அறிய விரும்புகிறது: அதிஷி குற்றச்சாட்டு

"பாஜக தவறு செய்தால் நாங்கள் கேட்போம்”: எடப்பாடி பழனிசாமி

நிச்சயதார்த்தம் உண்மைதான்: புகைப்படங்களை வெளியிட்ட சித்தார்த் - அதிதி ராவ்!

”இந்த அரசியல் சதிக்கு மக்கள் பதிலளிப்பார்கள்”: அரவிந்த் கேஜரிவால் | செய்திகள்: சில வரிகளில் | 28.03.2024

தூத்துக்குடியில் பலத்த மழை!

SCROLL FOR NEXT