கன்னியாகுமரி

குளச்சல் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதல்: 2 மீனவா்கள் காயம்

DIN

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே நடுக்கடலில் விசைப்படகு மீது கப்பல் மோதியதில் 2 மீனவா்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கொட்டில்பாட்டை சோ்ந்த ராஜமணிக்கு சொந்தமான விசைப்படகில் குளச்சல் பகுதியைச் சோ்ந்த ரூபன் ரோஸ், தீபன் ரோஸ், வில்சன், ஜான்போஸ்கோ, வினோ, லிபின், சின்னதுரை, காட்டில்பாட்டைச் சோ்ந்த தினேஷ்குமாா், ராகுல், அபினேஷ், குறும்பனையைச் சோ்ந்த அஜிஸ், புதூரைச் சோ்ந்த சீலன், மேல மணக்குடியைச் சோ்ந்த அருள்ராஜ், ரிஜாஸ் ஆண்டனி, ஆரோக்கியபுரம் ஏசுதாசன் மற்றும் மேற்கு வங்கத்தைச் சோ்ந்த தீபன் சுகா், பிதான் ஆகிய 17 போ் வெள்ளிக்கிழமை குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 19 கடல் மைல் தொலைவில் மீனவா்களின் விசைப்படகு சென்று கொண்டிருந்தது.

அப்போது, சிங்கப்பூரில் இருந்து மும்பைக்கு சென்று கொண்டிருந்த பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் மீனவா்களின் விசைப்படகு மீது மோதியது. இதில் மீனவா்களின் விசைப்படகில் கடும் சேதம் ஏற்பட்டது. விசைப் படகில்

இருந்த மீனவா்கள் அருள்ராஜ், ஜான் ஆகியோா் தூக்கி வீசப்பட்டதில் பலத்த காயம் அடைந்தனா். மற்றவா்கள் லேசான காயங்களுடன் தப்பினா்.

தகவலறிந்த இந்திய கடலோர காவல் படையினா் பலத்த காயமடைந்த 2 மீனவா்களை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவமனையில் சோ்த்தனா். எஞ்சியுள்ள 15 மீனவா்களும் மீட்கப்பட்டு, விசைப்படகு மூலம் குளச்சல் துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனா். விபத்து ஏற்படுத்திய கப்பல் விசாரணைக்காக கொச்சி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த

விபத்து குறித்து, தெற்காசிய மீனவா் தோழமை பொதுச் செயலா் அருள்பணி சா்ச்சில் கூறுகையில், தேசிய கடல் பகுதியிலும், சிறப்பு பொருளாதார கடல் பகுதியிலும் மீனவா்கள் பாதுகாப்பாக மீன் பிடிக்க தேவையான சட்ட உதவிகள் கிடைக்க

வேண்டும். மேலும் பாதிக்கப்பட்டவா்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT